பெண்ணாடம் அருகே வீடு புகுந்து திருட முயன்ற வாலிபரை மின்கம்பத்தில் கட்டி வைத்து அடி-உதை

பெண்ணாடம் அருகே வீடு புகுந்து திருட முயன்ற வாலிபரை மின்கம்பத்தில் கட்டி வைத்து கிராம மக்கள் அடித்து உதைத்தனர்.

Update: 2022-10-26 19:05 GMT


பெண்ணாடம், 

பெண்ணாடம் அருகே உள்ள வடகரை கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் மகன் ஈவராஜன்(வயது 35). கட்டிட தொழிலாளியான இவர், சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி, 2 குழந்தைகளுடன் வடகரையில் வசித்து வருகிறார். கடந்த 5 நாட்களுக்கு முன்புதான் ஈவராஜன், சிங்கப்பூரில் இருந்து சொந்த ஊருக்கு வந்திருந்தார்.இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 2 மணி அளவில் வாலிபர் ஒருவர், ஈவராஜனின் வீட்டிற்குள் புகுந்தார். இதை அதே தெருவை சேர்ந்த ஈவராஜனின் உறவினர் சம்பத் (48) பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது பற்றி அவர், ஈவராஜன் மற்றும் தனது நண்பர்களுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார்.

கம்பத்தில் கட்டி வைத்து அடி-உதை

இதையடுத்து கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள், ஈவராஜனின் வீட்டின் முன்பு திரண்டனர். அங்கு மொட்டை மாடியில் பதுங்கி இருந்த வாலிபரை பிடித்து, மின்கம்பத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்தனர்.

இது பற்றி தகவல் அறிந்ததும் பெண்ணாடம் போலீசார் விரைந்து வந்து மின் கம்பத்தில் கட்டி வைத்திருந்த வாலிபரை மீட்டனர். விசாரணையில் அவர், பெண்ணாடம் சோழநகரை சேர்ந்த சூரியமூர்த்தி(வயது 27) என்பதும், ஈவராஜன் வீட்டில் திருட முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்