வாலிபர் குத்திக்கொலை

ராஜபாளையத்தில் முன்விரோதத்தில் வாலிபரை கத்தியால் குத்திக்கொைல செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2023-09-17 20:07 GMT

ராஜபாளையம், 

ராஜபாளையத்தில் முன்விரோதத்தில் வாலிபரை கத்தியால் குத்திக்கொைல செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

பொதுமக்களிடம் பிரச்சினை

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள முகவூர் காமராஜ் தெருவை சேர்ந்த குருசாமி மகன் பாண்டிகாளி (வயது 22). இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராஜபாளையம் தெற்கு மலையடிப்பட்டி பகுதியில் குடும்பத்துடன் தங்கி இருந்தார். இந்நிலையில் பாண்டிகாளி, அவரது தாய்மாமன் காளீஸ்வரன் ஆகியோர் மது அருந்திவிட்டு அப்பகுதி மக்களிடம் பிரச்சினை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கொடுத்த புகாரின் பேரில் காளீஸ்வரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் மற்றொரு வழக்கில் பாண்டிகாளி மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கத்திக்குத்து

இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ராஜபாளையம் கோர்ட்டில் வழக்கிற்காக ஆஜராகி விட்டு காளீஸ்வரன், பாண்டிகாளி ஆகியோர் வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தனர்.

அப்போது ராஜபாளையம் காமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த செல்வம் (22), ஈஸ்வரன்(30), சுந்தர்ராஜ்(32) ஆகிய 3 பேரும் சேர்ந்து முன்விரோதம் காரணமாக பாண்டிகாளி, காளீஸ்வரனிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் 3 பேரும் பாண்டிகாளியை சரமாரியாக தாக்கி கத்தியால் குத்தினர். இதில் ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை மீட்டு ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

வாலிபர் சாவு

பின்னர் பாண்டிகாளியை மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் ராஜபாளையம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்