வாலிபருக்கு கத்திக்குத்து

நாகை அருகே வாலிபருக்கு கத்திக்குத்து விழுந்தது.

Update: 2022-12-12 18:45 GMT

சிக்கல்:

நாகை அருகே சிக்கல் மடத்தான் தெருவை சேர்ந்தவர் நவநீதம் மகன் மணிகண்டன் (வயது 32). டெக்கரேஷன் தொழில் செய்து வருகிறார். இவரது நண்பர் பொன்வெளி தெற்கு தெருவை சேர்ந்த ரகுபதி மகன் வினோத். சம்பவத்தன்று இரவு மணிகண்டன் தனது வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் கடை தெருவுக்கு சென்றுள்ளார்.அப்போது வினோத் தனது நண்பர்களான சிக்கல் விதைபண்ணை தெருவை சேர்ந்த ரஞ்சித் மகன் ராகுல்(19) மற்றும் ஒருவருடன், மணிகண்டனை வழிமறித்து தகராறு செய்துள்ளார். பின்னர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மணிகண்டனை வினோத் சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதில் படுகாயம் அடைந்த மணிகண்டனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.இதுகுறித்த புகாரின் பேரில் கீழ்வேளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராகுலை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய வினோத் மற்றும் ஒருவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்