விஷம் குடித்து வாலிபர் தற்ெகாலை

விஷம் குடித்து வாலிபர் தற்ெகாலை செய்து கொண்டார்.

Update: 2023-06-02 19:11 GMT

காரியாபட்டி, 

கமுதி அருகே உள்ள முஷ்டக்குறிச்சியை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் சங்கரலிங்கம் (வயது19). இவர் தனது தந்தையிடம் செலவுக்கு பணம் கேட்டதாவும் இதற்கு சங்கரலிங்கத்தின் தந்தை ராமச்சந்திரன் கொடுக்க மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து சங்கரலிங்கம் திருச்சுழி அருகே செங்குளம் கிராமம் அருகே விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

உடனே அவரது நண்பர்கள் அவரை மீட்டு அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சங்கரலிங்கம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பரளச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்