வாலிபர் பலி

பழனி ஆயக்குடி அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதியதில் வாலிபர் ஒருவர் பலியானார்.

Update: 2023-02-05 19:00 GMT

மதுரை மாவட்டம், பேரையூர் அருகே உள்ள சந்தையூரை சேர்ந்த தங்கசாமி மகன் கவிநேசன் (வயது 22). தைப்பூச திருவிழாவையொட்டி கவிநேசனின் தாய் மற்றும் உறவினர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு பழனிக்கு பாதயாத்திரையாக புறப்பட்டனர். நேற்று முன்தினம் அவர்கள் பழனிக்கு வந்து சேர்ந்தனர். இதற்கிடையே நேற்று கவிநேசன் தனது மோட்டார் சைக்கிளில் சந்தையூரில் இருந்து புறப்பட்டு பழனிக்கு வந்து கொண்டிருந்தார்.

ஆயக்குடி அருகே வந்தபோது பின்னால் வந்த அரசு பஸ் இவரின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கீழே விழுந்த கவிநேசன் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவலறிந்த ஆயக்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்