விபத்தில் வாலிபர் பலி

சங்ககிரி அருகே விபத்தில் வாலிபர் இறந்தார்.

Update: 2023-10-06 18:45 GMT

சங்ககிரி

சங்ககிரி பச்சக்காடு பகுதியை சேர்ந்த மகாதேவன் மகன் ஜீவகாந்த் (வயது 19), கூலி தொழிலாளி. இவர் மோட்டார் சைக்கிளில் சங்ககிரி நோக்கி ெசன்றார். அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது எதிர்பாராமல் மோதியதாக கூறப்படுகிறது. இதில் ஜீவகாந்த் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு சங்ககிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் ஜீவகாந்த் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சங்ககிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் சேலத்தை சேர்ந்த சரத்குமார் (32) என்பவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்