ரெயிலில் இருந்து தவறி விழுந்து வாலிபர் காயம்
அரக்கோணம் அருகே ரெயிலில் இருந்து தவறி விழுந்து வாலிபர் காயம் அடைந்தார்.;
சென்னை சென்டிரலில் இருந்து மங்களூர் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று மாலை திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் - செஞ்சி பனப்பாக்கம் ரெயில் நிலையத்திற்கு இடையே வந்து கொண்டிருந்தது. அப்போது ரெயிலில் பயணம் செய்த திருப்பூர் பகுதியை சேர்ந்த நந்தகுமார் (28) என்பவர் ரெயில் பெட்டியில் இருந்து தவறி விழுந்தார். இது குறித்து அரக்கோணம் ரெயில்வே போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சப் - இன்ஸ்பெக்டர்கள் ராமகிருஷ்ணன், செந்தில்குமார் தலைமையிலான போலீசார், கை மற்றும் கால்களில் பலத்த காயமடைந்து இருந்த நந்த குமாரை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.