வாலிபர் கைது

வத்தலக்குண்டு அருகே பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்

Update: 2023-06-18 19:30 GMT

வத்தலக்குண்டு நடுத்தெரு அருகே உள்ள ஒரு தனியார் திருமண மகாலில் மில்லில் வேலை பார்க்கும் வடமாநில தொழிலாளர்கள் 50 பேர் தங்கி உள்ளனர். நேற்று முன்தினம் நள்ளிரவு அந்த திருமண மகாலில் புகுந்து 4 செல்போன்களை திருடி சென்ற மர்ம நபரை தொழிலாளர்கள் மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை வத்தலக்குண்டு போலீஸ்நிலையத்தில் ஒப்படைத்தனர். அந்த மர்ம நபரிடம் நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு முருகன், இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்த பால்பாண்டி (வயது 27) என்றும், மல்லனம்பட்டியில் பெண்ணிடம் 12 பவுன் நகை பறிப்பு, வத்தலக்குண்டு அருகே குளிப்பட்டியில் தலைமையாசிரியர் வீட்டில் ரூ.1½ லட்சம் திருடிய வழக்கில் தொடர்பு இருப்பதும், இவையில்லாமல் பல்வேறு திருட்டு வழக்குகளில்ஈடுபட்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறை சென்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பால்பாண்டியை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த ரூ.1 லட்சம், 7 பவுன் நகைகள் மற்றும் 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது

Tags:    

மேலும் செய்திகள்