எருமப்பட்டியில்பொக்லைன் எந்திரத்தில் 'ஹைட்ராலிக்' பம்பு திருடிய வாலிபர் கைது

Update: 2023-06-18 18:45 GMT

எருமப்பட்டி

மோகனூர் அருகே உள்ள மூங்கில்பட்டியை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 39). இவர் சொந்தமாக பொக்லைன் எந்திரம் வைத்துள்ளார். இதை துரைராஜ் (21) என்பவர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு எருமப்பட்டி அருகே கரட்டுபுதூரை சேர்ந்த கந்தன் என்பவரது தோட்டத்தில் செடி, கொடிகளை பிடுங்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். பின்னர் பொக்லைன் எந்திரத்தை அதே பகுதியில் ஒரு வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு சென்றுள்ளார். இந்தநிலையில் வாலிபர் ஒருவர் பொக்லைன் எந்திரத்தில் இருந்து ஹைட்ராலிக் பம்பை கழட்டி தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அதை பார்த்த அங்கிருந்தவர்கள் அந்த வாலிபரை பிடித்து எருமப்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர், திருச்சி மாவட்டம் ஆலத்துடன் பட்டியைச் சேர்ந்த கார்த்திக் (22) என்பது தெரிந்தது. பின்னர் போலீசார் கார்த்திக் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்