திசையன்விளை:
உவரி பீச் காலனியை சேர்ந்தவர் சசிக்குமார். இவரது மகன் கவுதம் (வயது 22). இவர் வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ்சில் கையில் அரிவாள் மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் இருக்கும் புகைப்படங்கள், வீடியோக்களில் வன்முறையை தூண்டும் வாசகங்களை பதிவிட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக உவரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நதியா வழக்குபதிவு செய்து, கவுதமை கைது செய்தார்.