28 பவுன் நகை, பணம் திருடிய வாலிபர் கைது

காரைக்குடியில் 28 பவுன் நகைைய திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார். அவர் போலீசாரிடம் சிக்காமல் இருக்க வேறு உடையை மாற்றி சென்றது தெரியவந்தது.

Update: 2023-05-01 18:45 GMT

காரைக்குடி

காரைக்குடியில் 28 பவுன் நகைைய திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார். அவர் போலீசாரிடம் சிக்காமல் இருக்க வேறு உடையை மாற்றி சென்றது தெரியவந்தது.

நகை, பணம் திருட்டு

காரைக்குடி பர்மா காலனியை சேர்ந்தவர் காளிதாசன். இவர் அப்பகுதியில் உள்ள டிரைவிங் ஸ்கூலில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று காளிதாசனும் அவரது குடும்பத்தாரும் வீட்டை பூட்டிவிட்டு காரைக்குடியில் நடைபெற்ற கோவில் திருவிழாவிற்கு சென்றனர். பின்னர் வீடு திரும்பியபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உள்ளே பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 28 பவுன் நகைகள் மற்றும் 20 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை காணவில்லை. இது குறித்து காளிதாசன் காரைக்குடி வடக்கு போலீஸ் புகார் செய்தார்.

இதையடுத்து காரைக்குடி உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் உத்தரவின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்கள் பதிவுகளை கொண்டு விசாரணை நடத்தினர்.

உடையை மாற்றி சென்றார்

அப்போது ஒரே நபர் வெவ்வேறு உடை அணிந்து சென்றது தெரியவந்தது. அதாவது நகை, பணத்தை திருட செல்லும் போது கைலி மற்றும் சட்டையுடனும், திருடிவிட்டு வரும்போது கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளில் சிக்காமல் இருப்பதற்காகவும், போலீசாரை குழப்பும் வகையிலும் அடையாளத்தை மாற்றிக்கொள்ள ஒரு வீட்டில் உலர வைக்கப்பட்டிருந்த பேண்ட், சட்டையை எடுத்து போட்டுக்கொண்டு தான் அணிந்திருந்த கைலி, சட்டையினை அருகில் கழட்டிப்போட்டு சென்றதும் தெரியவந்தது.

விசாரணையில் அவர் மதுரை செக்கானூரணி அருகே உள்ள கின்னிமங்கலத்தை சேர்ந்த சின்னத்தம்பி என்ற ராஜ்குமார்(வயது 33) என தெரிய வந்தது.

கேரளாவில் பதுங்கி இருந்த அவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து நகைகள் மீட்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்