வாலிபர் கைது

வாலிபர் கைது

Update: 2022-11-14 18:45 GMT

காரைக்குடி

காரைக்குடி புறநகர் பகுதியை சேர்ந்த தச்சு தொழிலாளியின் 16 வயது மகள் பிளஸ்-1 படித்து வருகிறார். இவர் தோழியின் வீட்டிற்கு சென்று விட்டு வருவதாக கூறிச் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் குன்றக்குடி போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார், மாணவியின் செல்போன் எண்ணை ஆய்வு செய்தபோது சேலத்தில் கார் ஷோரூமில் வேலை பார்க்கும் கொண்டலாம்பட்டியை சேர்ந்த தமிழரசன் என்பவர் சமூக வலைத்தளம் மூலம் மாணவியுடன் அடிக்கடி பேசியிருப்பது தெரியவந்தது. இதைதொடர்ந்து போலீசார் சேலத்திற்கு அங்கு சென்றனர். அப்போது அங்கு காரைக்குடி மாணவி இருப்பது தெரியவந்தது. போலீசார் மாணவியை மீட்டு, தமிழரசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்