ராசிபுரம்
பேளுக்குறிச்சி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியிலிருந்து காவல் துறை அவசர உதவி எண்ணில் ஒரு பெண் புகார் தெரிவித்தார். இதையடுத்து ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது நாமகிரிப்பேட்டை அருகே உள்ள தொப்பட்டியைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 26) என்பவரை கைது செய்தனர். இது பற்றி ராசிபுரம் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் கைது செய்யப்பட்ட வாலிபர் மணிகண்டன் அந்த பெண்ணிடம் பாலியல் தொந்தரவு செய்ததை ஒப்புக் கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் ராசிபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.