நாமகிரிப்பேட்டை அருகே நண்பனின் மோட்டார் சைக்கிளை திருடிய வாலிபர் கைது

Update: 2023-07-09 18:45 GMT

நாமகிரிப்பேட்டை

நாமகிரிப்பேட்டை அருகே சீராப்பள்ளி ஒடுவன் குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி மகன் மணி (வயது23). அதே பகுதியை சேர்ந்தவர் பழனிவேல் மகன் மணிமுத்து (24). இவர்கள் இருவரும் நண்பர்கள். இந்தநிலையில் சம்பவத்தன்று மணி வீட்டு முன்பு நிறுத்தி இருந்த தனது மோட்டார் சைக்கிள் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் நாமகிரிப்பேட்டை போலீஸ் நிலையில் புகார் அளித்தார். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மணியின் நண்பரான மணிமுத்து மோட்டார் சைக்கிளை திருடி மெட்டாலா சைக்கிள் ஸ்டாண்டில் நிறுத்தி வைத்திருப்பது தெரியவந்தது. பின்னர் போலீசார் மணிமுத்து மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்