காவலாளியை மதுபாட்டிலால் குத்திய வாலிபர்
காவலாளியை மதுபாட்டிலால் குத்திய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.;
திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்தவர் நசுருதீன் (வயது 65). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று அந்த ஓட்டலுக்கு குடிபோதையில் வந்த வாலிபர், நசுருதீனை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன் மதுபாட்டிலால் குத்தியதாக தெரிகிறது. இதில் படுகாயம் அடைந்த அவர் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நசுருதீனை தாக்கியவரை தேடி வருகிறார்கள்.