தாமிரபரணி ஆற்று பாலத்தில் இருந்து தவறி விழுந்த வாலிபர்-ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

நெல்லை தாமிரபரணி ஆற்று பாலத்தில் இருந்து வாலிபர் தவறி கீழே விழுந்தார். இதில் காயம் அடைந்த அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.;

Update: 2023-05-07 19:30 GMT

நெல்லை தாமிரபரணி ஆற்று பாலத்தில் இருந்து வாலிபர் தவறி கீழே விழுந்தார். இதில் காயம் அடைந்த அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தாமிரபரணி ஆற்றுப்பாலம்

நெல்லையின் அடையாளங்களில் ஒன்றாக நெல்லை கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றுப்பாலம் உள்ளது. இந்த பாலத்தில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்த நிலையில் நேற்று காலையில் வாலிபர் ஒருவர் ஆற்றுப்பாலத்தில் நடந்து வந்து கொண்டு இருந்தார். அப்போது அவர் பாலத்தில் இருந்து தண்ணீரை பார்த்துக்கொண்டு இருந்த போது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் மணல் பரப்பில் விழுந்த அவர் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடியவாறு கிடந்தார்.

போலீஸ் விசாரணை

இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கை மற்றும் காலில் பலத்த காயம் அடைந்த அந்த நபருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இதுகுறித்து நெல்லை சந்திப்பு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் நெல்லை பேட்டையை சேர்ந்த ஆல்பர்ட் (வயது 34) என்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்