ஆற்றில் குளிக்கச் சென்ற வாலிபர் நீரில் மூழ்கினார்

ஆரணி அருகே ஆற்றில் குளித்த வாலிபர் தாய் கண்ணெதிரே தண்ணீரிர் மூழ்கினார். அவரை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்ள் ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2022-12-28 16:14 GMT

ஆரணி 

ஆரணி அருகே ஆற்றில் குளித்த வாலிபர் தாய் கண்ணெதிரே தண்ணீரிர் மூழ்கினார். அவரை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்ள் ஈடுபட்டு வருகின்றனர்.

மூழ்கினார்

ஆரணி டவுன் ராமகிருஷ்ணா பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மாதவன். முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி சுகந்தி. மகன் குமார் (வயது 27). இவர்களும், கண்ணமங்கலத்தில் உள்ள உறவினர் மருது என்பவரின் குழந்தைகள் ரோகித் (14) ஸ்ரீ நிகிதா (6) ஆகிய 5 பேரும் நேற்று மாலை விண்ணமங்கலம் பகுதி செய்யாற்றில் தெள்ளூர் தடுப்பணை அருகாமையில் குளிக்கச் சென்றுள்ளனர். சுகந்தி மட்டும் கரையோரம் அமர்ந்திருந்த நிலையில் மற்ற 4பேரும் ஆற்றில் இறங்கி குளிக்க சென்றனர்.

சிறிது நேரத்திலேயே மாதவன், ரோகித், ஸ்ரீ நிகிதாவை அழைத்துக் கொண்டு கரையேறி உள்ளார். பின்னால் வந்து கொண்டிருந்த மதன் குமார் திடீரென தண்ணீரில் எதிர்நீச்சல் அடித்தார்.

இந்த நிலையில் மூவரும் கரையேறிய நிலையில் கரையோரம் இருந்த தாய் சுகந்தி, மதன்குமாரை பார்த்தபோது அவரது கை மட்டும் ெவளியே தெரிந்த நிலையில் தண்ணீரில் மூழ்கினார்.

இதனை பார்த்து சுகந்தி கூச்சலிட்டார். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் பொதுமக்களும் திரண்டு வந்து ஆற்றுத் தண்ணீரில் இறங்கி மதனை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த ஆரணி தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) சரவணன் தலைமையில் வீரர்கள் சென்றனர். மேலும் போளூரிலிருந்து 108 அவசர ஆம்புலன்ஸ் வரவைக்கப்பட்டது,

தேடும் பணி

அதற்குள் இரவானதால் ராமகிருஷ்ணப்பேட்டை பகுதியைச் சேர்ந்த நகர மன்ற உறுப்பினர் அரவிந்த், தெள்ளூர் ஊராட்சி மன்ற தலைவர் குமரவேல் ஆகியோர் தேடுதல் பணிக்காக ஜெனரேட்டர் ஏற்பாடு செய்தனரங். அதன் மூலம் மின்விளக்குகள் போடப்பட்டு தண்ணீரில் மூழ்கிய மதன்குமாரை தீயணைப்பு படையினர் தேடி வருகின்றனர்.

ஆரணி தாலுகா போலீசாரும் அங்கு விரை்து சென்றனர். சம்பவம் நடந்த பகுதி சேத்துப்பட்டு போலீஸ் நிலையத்துக்கு உட்பட்டது என்பதால் சேத்துப்பட்டு போலீசாரும் தேடுதல் பணியின் போது உடன் இருந்தனர். தனது கண் முன்னே மகன் ஆற்றில் முழ்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்து சுகந்தி கதறியவாறு இருந்தார். தொடர்ந்து மீட்பு பணி நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்