வாலிபர் சிகிச்சை பலனின்றி சாவு

தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்ற வாலிபர் சிகிச்சை பலனின்றி சாவு திருமணமான 4 மாதத்தில் பரிதாபம்

Update: 2022-08-15 18:40 GMT

வேதாரண்யம்:

வேதாரண்யம் தாலுகா, வானவன்மகாதேவி மீனவா் கிராமத்தை சேர்ந்தவர் வைத்திலிங்கம் (வயது 27). மீன்பிடி தொழில் செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி 4 மாதம் ஆகிறது. இவருக்கு கடந்த ஒரு வாரமாக உடல்நலம் சரியில்லாமல் சிரமப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக சம்பவத்தன்று வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதைக்கண்டதும் வீட்டில் உள்ளவா்கள் அவரை மீட்டு நாகை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் வேட்டைக்காரனிருப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேவசேனாதிபதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Tags:    

மேலும் செய்திகள்