ேமாதலில் காயம் அடைந்த வாலிபர் சாவு
ராமேசுவரத்தில் பங்குனி உத்திரத்தன்று மோதலில் காயம் அடைந்த வாலிபர் இறந்தார்.
ராமேசுவரம்,
ராமேசுவரத்தில் பங்குனி உத்திரத்தன்று மோதலில் காயம் அடைந்த வாலிபர் இறந்தார்.
செல்போன் மாயம்
ராமேசுவரம் மேலவாசல் முருகன் கோவிலில் கடந்த 5-ந் தேதி பங்குனி உத்திர திருவிழா கொண்டாடப்பட்டது. அன்று ராமேசுவரம் புது ரோடு, ராமகிருஷ்ணபுரம் பகுதியைச் சேர்ந்த முகேஷ் (வயது 24) என்பவர் அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் காவடி எடுத்து வரும்போது நண்பர்களுடன் சேர்ந்து ஆடியபடி வந்துள்ளார். என்.எஸ்.கே.வீதி சாலையில் வந்த போது முகேஷ் செல்போன் தவறி கீழே விழுந்தது.
அப்போது மாந்தோப்பு பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் இந்த செல்போனை எடுத்துச் சென்றதாக கூறப்படுகின்றது. அதைத் தொடர்ந்து மாந்தோப்பு பகுதியில் நின்று கொண்டிருந்த இளைஞர்களிடம் தனது செல்போனை எடுத்திருந்தால் கொடுத்து விடுங்கள் என கேட்டதாக கூறப்படுகின்றது.
வாலிபர் அடித்துக்கொலை
அப்போது அங்கு கூடியிருந்த இளைஞர்கள் முகேசை தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவர் ராமேசுவரம் மற்றும் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இது குறித்து துறைமுக போலீஸ் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து ராமேசுவரம் மாந்தோப்பு பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் (24) என்பவரை கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக தப்பி ஓடிய மாந்தோப்பு பகுதியைச் சேர்ந்த ராம்கி (20) கணேஷ் (25) ராம்குமார் (25) புஷ்பராஜ் (18) ராஜகுரு (20) பாலமுருகன் (25) ரமேஷ், பாரதிராஜா, வினோத்குமார் உள்ளிட்ட 11 பேரை தேடி வருகின்றனர்.
இதனிடையே மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முகேஷ் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.