வாலிபர் மர்ம சாவு

பகண்டை கூட்டு ரோடு அருகே வாலிபர் மர்ம சாவு போலீசார் தீவிர விசாரணை;

Update: 2023-02-13 18:45 GMT

ரிஷிவந்தியம்

பகண்டை கூட்டு ரோடு அருகே உள்ள பெரியக்கொள்ளியூர் கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி மகன் சக்திவேல்(வயது 33). பெங்களூருவில் கூலி வேலை செய்து வந்த இவர் கடந்த 11-ந் தேதி உறவினர் இல்ல சுபநிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பெரியக்கொள்ளியூருக்கு வந்தார்.

இந்த நிலையில் அதே பகுதியில் உள்ள விளைநிலத்தில் சக்திவேல் மர்ம மான முறையில் இறந்து கிடந்தார். இதுபற்றிய தகவல் அறிந்து வந்த பகண்டை கூட்டுரோடு போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சக்திவேல் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்