தாயை தாக்கி, மாணவியை கடத்திய வாலிபர்
தூக்கணாம்பாக்கம் அருகே தாயை தாக்கி, மாணவியை வாலிபர் கடத்தி சென்றது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
தூக்கணாம்பாக்கம்
தூக்கணாம்பாக்கம் அருகே உள்ள திருப்பணாம்பாக்கத்தை சேர்ந்த 17 வயதுடைய மாணவி, நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று மாணவியின் வீட்டுக்குள் புகுந்த வாலிபர் ஒருவர், அவரை காதலிப்பதாக கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் தாய், அந்த வாலிபரை தட்டி கேட்டுள்ளார்.
அப்போது அவர், மாணவியின் தாயை தாக்கி விட்டு, மாணவியை கடத்தி சென்றார். இதுகுறித்து தூக்கணாம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருவதுடன், மாணவியையும், அவரை கடத்தி சென்ற வாலிபரையும் தேடி வருகின்றனர்.