விபத்தில் ஆசிரியையின் கணவர் பலி
திசையன்விளையில் விபத்தில் ஆசிரியையின் கணவர் பலியானார்.
திசையன்விளை:
திசையன்விளை புளியடி தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 58). பழ வியாபாரியான இவர் நேற்று காலை திசையன்விளையில் மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த அரசு பஸ் அவர் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அவர் மீது பஸ் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேேய ராஜேந்திரன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திசையன்விளை போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். விபத்தில் பலியான ராஜேந்திரன் மனைவி சாவித்ரி படுக்கப்பத்து பிச்சுவிளை அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.