3-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: ஆசிரியருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை சேலம் போக்சோ கோர்ட்டு தீர்ப்பு

3-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து சேலம் போக்சோ கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

Update: 2022-05-30 20:37 GMT

சேலம், 

தனியார் பள்ளி ஆசிரியர்

சேலம் அம்மாபேட்டை தியாகி நடேசன் தெருவை சேர்ந்தவர் சதீஷ் (வயது 24). இவர், சேலம் 3 ரோடு அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் கணினி ஆசிரியராக பணியாற்றி வந்தார். கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ந் தேதி பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்த மாணவிக்கு, ஆசிரியர் சதீஷ் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மாணவியின் பெற்றோர் தரப்பில் சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் ஆசிரியர் சதீஷ் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.

5 ஆண்டு சிறை

இந்த வழக்கு சேலம் போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்தநிலையில், இந்த வழக்கில் இறுதி விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் சதீசுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சேரன் தீர்ப்பு அளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்