மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த ஆசிரியர் டிராக்டர் சக்கரத்தில் சிக்கி பலி

ஆரணியில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த ஆசிரியர் டிராக்டர் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-08-27 13:49 GMT

ஆரணி

ஆரணியில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த ஆசிரியர் டிராக்டர் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக இறந்தார்.

ஆசிரியர்

ஆரணி - சேத்துப்பட்டு நெடுஞ்சாலை சிவசக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் துளசிராமன் (வயது 48). இவருக்கு ஜீவா என்ற மனைவியும், புவனேஸ்வரி என்ற மகளும் உள்ளனர்.

துளசிராமன் ராணிப்பேட்டை மாவட்டம் வாழைப்பந்தல் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வந்தார்.

இவர் இன்று மோட்டார் சைக்கிளில் கொசப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தந்தை சந்திரனை பார்ப்பதற்காக சென்றார்.

அருணகிரி சத்திரம் பகுதி அருகே வரும்போது சாலையில் உள்ள பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் ஏறி இறங்கும்போது தவறி கீழே விழுந்தார்.

டிராக்டரில் சிக்கி பலி

அதே நேரத்தில் இவருக்கு முன்னால் சென்ற அறுவடை எந்திர டிராக்டர் சக்கரத்தில் துளசிராமன் சிக்கி கொண்டார். இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து ஆரணி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து டிராக்டர் டிரைவர் சேலம் பகுதி சேர்ந்த வெங்கடேசன் (29) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்