டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்ற வேண்டும்

டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்ற வேண்டும்

Update: 2022-09-18 18:45 GMT

மங்கைமடத்தில் உள்ள டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என நுகர்வோர் பாதுகாப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நுகர்வோர் பாதுகாப்பு கூட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காட்டில் நாகை மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு சேவை அமைப்பின் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் அலிக்குள் ஜமான் முன்னிலை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர் காசி பாலசுப்பிரமணியன் வரவேற்றார். கூட்டத்தில், மங்கைமடம் கடைத்தெருவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு டாஸ்மாக் கடை மெயின் சாலையில் திறக்கப்பட்டுள்ளது. மங்கைமடத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட வியாபார கடைகள் உள்ளன. மேலும் 50 கிராம மக்கள் சீர்காழி மற்றும் பல்வேறு ஊர்களுக்கு செல்ல மங்கைமடத்தின் வழியாக தான் செல்ல வேண்டும். தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். அதோடு மட்டுமல்லாமல் கோவில்கள் நிறைந்த பகுதியாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டு உடனடியாக அந்த டாஸ்மாக் கடையை அகற்ற மண்டல மேலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தடுப்பணை பணிகள்

திருநகரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் தடுப்பணை பணிகளை விரைவுபடுத்துவது. பெருந்தோட்டம் ஏரியை முழுமையாக தூர்வாரி தண்ணீர் தேக்க நடவடிக்கை எடுக்க பொதுப்பணித்துறை அதிகாரிகளை கேட்டுக்கொள்வது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் பொருளாளர் சுவாமிநாதன், ஒருங்கிணைப்பாளர் அலாவுதீன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட துணைச்செயலாளர் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்