ரோஜா செடிகளை கவாத்து செய்யும் பணி

ரோஜா செடிகளை கவாத்து செய்யும் பணி

Update: 2023-02-10 18:45 GMT

ஊட்டி

ஊட்டி அரசு ரோஜா பூங்காவில் 4 ஆயிரத்து 201 ரகங்களில் 31 ஆயிரத்து 500 செடிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு கோடை சீசன் காரணமாக வருகிற ஏப்ரல், மே மாதங்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதகிரிக்கும். இதையொட்டி ரோஜா செடிகளில் கவாத்து செய்யும் பணிகளை கலெக்டர் அம்ரித் தொடங்கி வைத்தார். இதன் மூலம் ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்தே ரோஜா செடிகளில் மலர்கள் பூத்துக்குலுங்கி சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்து படைக்கும். இந்த நிகழ்ச்சியில் தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் ஷிபிலாமேரி, துணை இயக்குனர் பாலசங்கர், உதவி இயக்குனர்கள் ஜெயந்தி (கோத்தகிரி), இராதாகிருஷ்ணன் (குன்னூர்), அனிதா (ஊட்டி) மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்