உண்டியல் காணிக்கை எண்ணும் பணி
இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது.
சாத்தூர்,
இருக்கன்குடி மாரியம்மன் ேகாவிலில் ஒவ்வொரு மாதமும் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்படுவது வழக்கம். அதன்படி நேற்று 10 உண்டியல்கள், 4 தற்காலிக உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடந்தது. அதில் ரூ.81 லட்சத்து 1,488-ம், தங்கம் 309 கிராம், வௌ்ளி 1,014 கிராம் கிடைத்தது. பணம் எண்ணும் பணியில் சாத்தூர், மதுரை, துலுக்கப்பட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த ஓம்சக்தி பக்தர் குழு, ஐயப்ப சேவா சங்கம் மற்றும் கோவில் ஊழியர்கள் கலந்து கொண்டனர். இந்து அறநிலைய துறை விருதுநகர் கோவில்களின் உதவி ஆணையர் வளர்மதி, இருக்கன்குடி கோவில் உதவி ஆணையர் கருணாகரன் தலைமையில் பரம்பரை அறங்காவலர் தலைவர் ராமமூர்த்தி மற்றும் அறங்காவலர் குழுவினர், கோவில் அலுவலர்கள் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.