உண்டியல் காணிக்கை எண்ணும் பணி

உண்டியல் காணிக்கை எண்ணும் பணி

Update: 2022-10-12 18:45 GMT

திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். மணிவிழா, சதாபிஷேகம், ஆயுள்ஹோமம் உள்ளிட்ட திருமணங்கள் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் மட்டுமே நடைபெறுகிறது. இந்த கோவிலில் கடந்த மார்ச் 27-ந்தேதி குடமுழுக்கு நடைபெற்றது. நேற்று மயிலாடுதுறை மாவட்ட இந்து சமய அறநிலைய துறை உதவி ஆணையர் முத்துராமன், ஆய்வாளர் பத்ரி நாராயணன் ஆகியோர் முன்னிலையில் கோவில் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இந்த பணியில் கல்லூரி மாணவிகள், பொதுமக்கள், மகளிர் சுய உதவி குழுக்கள் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் கண்காணிப்பாளர், தருமபுரம் ஆதீன அலுவலர்கள், கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்