அக்.9ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவை கூடுகிறது..!
தமிழக சட்டசபை வரும் அக்டோபர் 9-ம் தேதி கூடுகிறது என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
சென்னை,
சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களிடம் கூறுகையில்,
'சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதுதான் கவர்னரின் பணி. பார்லி., கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி உரையாற்றுவது தான் மரபு. ஆனால், அவர் அழைக்கப்படவில்லை.
புதிய பார்லி., கட்டிட திறப்பு விழாவிற்கும் அவரை அழைக்கவில்லை. மகளிர் இடஒதுக்கீடு மசோதா உடனடியாக அமலுக்கு வராது என மத்திய அரசு கூறியுள்ளது. தமிழக சட்டசபை வரும் அக்டோபர் 9-ம் தேதி கூடுகிறது என்றார்.
தமிழக சட்டமன்றப்பேரவை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
தமிழ்நாடு சட்டமன்றப்பேரவையின் அடுத்தக்கூட்டத்தை 2023-ம் ஆண்டு அக்டோபர் திங்கள் 9-ம் நாள் திங்கட்கிழமை காலை 10 மணிக்கு தலைமைச்செயலகத்தில் உள்ள சட்டமன்றப்பேரவை மண்டபத்தில் பேரவைத்தலைவர் கூட்டியுள்ளார். மேலும் அன்று 2023-24-ம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக்கோரிக்கைகள் பேரவைக்கு அளிக்கப்பெறும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.