மூளையை தின்னும் அமீபா பாதிப்பு குறித்து வழிகாட்டுதல்களை வெளியிட்டது தமிழக அரசு

கேரளாவில் மூளையை தின்னும் அமீபாவுக்கு 3 பேர் உயிரிழந்த நிலையில் வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2024-07-08 01:53 GMT

சென்னை,

அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது;

"தேங்கி இருக்கும் நீரில் குளிப்பதைப் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் தவிர்க்க வேண்டும். நீர்நிலைகள், குளங்கள், ஏரிகளில் சுற்றுச்சூழல் சுகாதாரம் பேணப்பட வேண்டும். அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ் என்னும் மூளையைத் தின்னும் நோய்த் தொற்று தொடர்பான உயிரிழப்புகள் கேரளாவில் நிகழ்ந்ததைக் கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்களுக்கும், அறிகுறிகளின் அடிப்படையில் சந்தேகத்திற்குரிய பாதிப்புகள் உள்ளவர்களை கண்டறிய ஆலோசனை வழங்கப்பட வேண்டும். மேலும், சந்தேகத்திற்குரிய பாதிப்புகள் உள்ளவர்களை உடனடியாக மூன்றாம் நிலை பராமரிப்பு மையங்களுக்கு பரிந்துரைக்க வேண்டும்."

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்