புளியமரம் தீப்பிடித்து எரிந்தது
புளியமரம் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் அருகே அரியப்பபுரம் ரெயில்வே கேட்டுக்கு மேற்கு பகுதியில் உள்ள பழமைவாய்ந்த புளியமரம் நேற்று மாலையில் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. மரம் முழுவதும் தீ மளமளவென்று பரவி கொழுந்து விட்டு எரிந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும், சுரண்ைட தீயணைப்பு நிலைய அலுவலர் ரவீந்திரன் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். பின்னர் அந்த மரத்தை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினர்.