நாகை சிறையில் அடைக்கப்பட்டு இருந்த கைதி 'திடீர்' சாவு
நாகை சிறையில் அடைக்கப்பட்டு இருந்த கைதி திடீரென இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாகப்பட்டினம்:
நாகை சிறையில் அடைக்கப்பட்டு இருந்த கைதி திடீரென இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.கைதி
நாகை மாவட்டம் திட்டச்சேரி அருகே உள்ள கொத்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன்(வயது44). தொழிலாளி. கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியில் பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக இரு தரப்பினரிடையே தகராறு நடந்தது.இதுகுறித்து வெங்கடேசன் என்பவர் அளித்த புகாரின் பேரில் சிவசுப்பிரமணியன் உள்பட 4 பேர் மீது திட்டச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் 3 பேர் தலைமறைவான நிலையில் சிவசுப்பிரமணியனை போலீசார் கைது செய்து நாகை கிளை சிறையில் அடைத்தனர்.
திடீர் சாவு
சிறையில் இருந்த சிவசுப்பிரமணியனுக்கு நேற்று முன்தினம் இரவு திடீர் என்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை சிறை காவலர்கள் நாகை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.அங்கு சிகிச்சை பெற்று வந்த சிவசுப்பிரமணியன் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து வெளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.நாகை சிறையில் அடைக்கப்பட்டு இருந்த கைதி திடீரென இறந்தது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.