தாய் இறந்தது தெரியாமல் பால்குடித்த குட்டி எலி
மணப்பாறையில் தாய் இறந்தது தெரியாமல் குட்டி எலிபால் குடித்தது.;
மணப்பாறையில் உள்ள ஒரு கடையை ஒட்டியுள்ள இடத்தில் எலியின் வலை (பொந்து) ஒன்று இருந்தது. அந்த எலி வலையின் அருகே பெரிய எலி ஒன்று அமர்ந்த நிலையிலேயே இருந்தது. அப்போது அந்த வலையில் இருந்து வெளியே வந்த குட்டி எலி தன்னுடைய தாயிடம் சென்று பால்குடித்தது. மிகவும் சிரமப்பட்டு தலைகீழாக படுத்துக்கொண்டு குட்டி எலி பால்குடித்துக்கொண்டே இருந்தது. பின்னர் சிறிது நேரத்தில் அந்த எலி வலைக்குள் சென்று விட்டது. இந்த நிகழ்வு சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. பின்னர் பார்த்த போது தான் தாய் எலி இறந்து கிடப்பதும், அது இறந்தது தெரியாமல் குட்டிஎலி பால்குடித்துக்கொண்டிருந்ததும் தெரியவந்தது. இந்த நிகழ்வு காண்போரை கண்கலங்க செய்தது.