வாரிசுகளுக்கு உடனே வேலை வழங்க வேண்டும்
இறந்த சாலை பணியாளர்களின் வாரிசுகளுக்கு உடனே வேலை வழங்க வேண்டும் என தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கம் பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.;
ராஜபாளையம்,
இறந்த சாலை பணியாளர்களின் வாரிசுகளுக்கு உடனே வேலை வழங்க வேண்டும் என தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கம் பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
பொதுக்குழு கூட்டம்
ராஜபாளையத்தில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் மாவட்ட கவன ஈர்ப்பு பொதுக்குழு கூட்டம் நெடுஞ்சாலைத்துறை அலுவலக வளாகத்தில் வட்டாரத்தலைவர் குமார் பாண்டி தலைமையில் நடைபெற்றது.
கிளைத்தலைவர் மலையரசன் முன்னிலை வகித்தார். மாவட்ட இணை செயலாளர் தேவராஜ், மாவட்ட துணைத்தலைவர் கோபால் ஆகியோர் வரவேற்றனர். கூட்டத்தில் மாநிலச் செயலாளர் ஹரி பாலகிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் முருகன் செந்தில் வேல் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் மாநில பொருளாளர் தமிழ் நிருபர்களிடம் கூறியதாவது:- சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி வழங்க வேண்டும்.
வாரிசு வேலை
இறந்த சாலை பணியாளர்களின் வாரிசுகளுக்கு 10 ஆண்டுகள் ஆகியும் பணி வழங்கப்படாத நிலை உள்ளது.
ஆதலால் தமிழக அரசு உடனடியாக அனைத்து சாலை பணியாளர்களுக்கு சலுகைகள் வழங்க வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றாத பட்சத்தில் அடுத்த கட்ட போராட்டமாக வருகிற 10-ந் தேதி கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் முன்பு பட்டை நாமம் போட்டு போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முடிவில் மாநில செயற்குழு உறுப்பினர் கருப்பையா நன்றி கூறினார்.
முன்னதாக கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.