மண் மேடுகளால் சூழப்பட்ட சார் பதிவாளர் அலுவலகம்
தூசியில் மண் மேடுகளால் சூழப்பட்ட சார் பதிவாளர் அலுவலகம்;
தூசி
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா தூசி கிராமத்தில் தூசி சார் பதிவாளர் அலுவலகம் உள்ளது.
சுமார் 35 வருவாய் கிராமங்களை உள்ளடக்கிய இந்த சார் பதிவாளர் அலுவலகத்துக்கு தினமும் 100-க்கும் மேற்பட்டவர்கள் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் கடந்த மாதம் காஞ்சீபுரம்- வந்தவாசி சாலையில் சாலை அமைக்கும் பணிக்காக சார் பதிவாளர் அலுவலகம் எதிரில் மண்மேடுகள் குவிக்கப்பட்டது.
சுமார் 45 நாட்கள் ஆகியும் இதுவரை நெடுஞ்சாலை ஒப்பந்தக்காரர் மண்மேடுகளை அகற்றாமல் உள்ளார்கள்.
இதனால் பத்திரப்பதிவுக்கு வரும் கிராம மக்கள் மண்மேடுகளால் சூழப்பட்டுள்ள சார்பதிவாளர் அலுவலகத்துக்கு உள்ளே செல்லவும், வாகனங்களை வெளியில் நிறுத்தவும் முடியாமல் அவதிப்படுகின்றனர்.
எனவே, மண்மேடுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.