எருது விடும் விழா நடக்கும் வீதியை சப்-கலெக்டர் ஆய்வு

கோவிந்தரெட்டி பாளையத்தில் எருதுவிடும் விழா நடக்கும் வீதியை சப்-கலெக்டர் பூங்கொடி ஆய்வு செய்தார்.

Update: 2023-01-14 17:14 GMT

வேலூர் மாவட்டம் ஊசூரை அடுத்த கோவிந்தரெட்டிபாளையத்தில் பொங்கல் பண்டிகையை யொட்டி எருது விடும் விழா நடைபெற உள்ளது. விழா நடைபெற உள்ள வீதியில் தடுப்புகள் அமைப்பது, மண் கொட்டுவது உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருவதை சப்-கலெக்டர் பூங்கொடி நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அரசு விதிகளின்படி விழா ஏற்பாடுகள் முறையாக நடக்கிறதா? என அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

ஆய்வின்போது அணைக்கட்டு தாசில்தார் (பொறுப்பு) மீராபென்காந்தி, ஊராட்சி மன்ற தலைவர் கவிதாசிவகுமார், வருவாய் ஆய்வாளர் ஜெயந்தி, கிராம நிர்வாக அலுவலர் அசோக் மற்றும் பலா் உடன் இருந்தனர்.

இதேபோல் சிவநாதபுரம் கிராமத்திலும் எருது விடும் விழா நடைபெறும் வீதி மற்றும் ரேஷன் கடை உள்ளிட்ட இடங்களிலும் சப்-கலெக்டர் ஆய்வு செய்தார்.

மேலும் சிவநாதபுரம் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர்கள் கொண்டாடிய சமத்துவ பொங்கல் விழாவிலும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்