'தி ரெட் பலூன்' திரைப்படம் பார்த்த மாணவ-மாணவிகள்

அரசு பள்ளிகளில் 'தி ரெட் பலூன்' திரைப்படம் மாணவ-மாணவிகள் பார்த்தனர்

Update: 2022-10-13 18:45 GMT

தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிக்கூடங்களில் 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு மாதத்தின் ஒவ்வொரு 2-வது வாரமும் பாட இடைவேளையில் சிறார் திரைப்படங்கள் திரையிட உத்தரவிடப்பட்டு உள்ளது.

அதன்படி நேற்று கோவை மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி களில் தி ரெட் பலூன் என்ற திரைப்படம் திரையிடப் பட்டது. இதை மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் பார்த்து ரசித்தனர். இந்த படமானது பிரெஞ்சு மொழியில் தயாரிக்கப்பட்டு ஆஸ்கார் விருது பெற்ற குழந்தைகளுக்கான குறும்படம் ஆகும்.

மேலும் செய்திகள்