கண்டக்டரை மாணவர்கள் தாக்க முயன்றதால் பரபரப்பு

அரசு பஸ்சில் கண்டக்டரை மாணவர்கள் தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-07-26 18:03 GMT

குடியாத்தத்தில் இருந்து வெட்டுவானம், திப்பசமுத்திரம் வழியாக ஒடுகத்தூருக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் அகரம்சேரி, பள்ளி குப்பம் வழியாகவும் பஸ்கள் இயளக்கப்படுகிறது.

இந்த பேருந்துகளில் கல்லூரி மாணவர்கள் உட்பட வியாபாரிகள் விவசாயிகள் கூட்ட நெரிசலில் பயணம் செய்து வருகின்றனர். காலை, மாலை வேலைகல் மாணவர்கள் படியில் தொங்கிய படியே பயணம் செய்து வருகின்றனர்.

அவர்களை பஸ்சுக்குள் மாணவர்களை வரும்படி கண்டக்டர் கூறும்போது வாய் தகராறு ஏற்பட்டு பஸ்கள் நடுவழியில் நிற்கும் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் நேற்று மாலை குடியாத்தத்தில் இருந்து வெட்டுவானம் வழியாக தடம் எண் 10 என்ற அரசு பஸ் ஒடுகத்தூருக்கு சென்று கொண்டிருந்தது. அதில் கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் என 80-க்கும் மேற்பட்டோர் சென்று கொண்டிருந்தனர்.

திப்பசமுத்திரம் அருகே சென்றபோது பள்ளி மாணவர்கள் விசில் அடித்தும் கூச்சலிட்டும் இடையூறு செய்தனர். அவர்களை கண்டக்டர் கண்டித்தார்.

அப்போது கண்டக்டரை மாணவர்கள் தாக்க முயன்றனர். இதனால் பஸ்ஸை பாதியிலேயே டிரைவர் நிறுத்தினர். ஆத்திரம் அடைந்த மாணவர்கள் தகாதவார்த்தையால் திட்டி டிரைவரையும் தாக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பஸ் நிறுத்தப்பட்டதால் பயணிகளும் அவதிப்பட்டனர்.

தகவல் அறிந்த பள்ளிகொண்டா போலீசார் மாணவர்களை சமரசம் செய்தனர். பின்னர் அரைமணி நேரம் தாமதத்துடன் பஸ:புறப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்