கண் பார்வை இழந்த மாணவி 443 மதிப்பெண் பெற்று சாதனை சோளிங்கர் போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்து பாராட்டு விழா

பிளஸ்-2 தேர்வில் கண்பார்வை இழந்த நிலையிலும் 443 மதிப்பெண் பெற்று சாதனை படைத்த மாணவியை போலீஸ் நிைலயத்துக்கு வரவைழத்து போலீசார் கேக்வெட்டி பாராட்டினர்.

Update: 2022-06-21 18:04 GMT

சோளிங்கர்

பிளஸ்-2 தேர்வில் கண்பார்வை இழந்த நிலையிலும் 443 மதிப்பெண் பெற்று சாதனை படைத்த மாணவியை போலீஸ் நிைலயத்துக்கு வரவைழத்து போலீசார் கேக்வெட்டி பாராட்டினர்.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட எள்ளுப்பாறை பகுதியை சேர்ந்த தமிழ்செல்வியின் மகள் யோகலட்சுமி. உடல்நல குறைபாட்டால் பார்வை இழந்தார். ஏழ்மையான குடும்பம் என்பதால் கண் சிகிச்சைக்கு தேவையான நிதியுதவி வழங்க சட்டசபையில் சு.ரவி எம்.எல்.ஏ. வலியுறுத்தியிருந்தார்.

அதன் பிறகு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், ஆர்.காந்தி, ஜெகத்ரட்சகன் எம்.பி.ஆகியோர் மாணவியை நேரில் பார்த்து ஆறுதல் கூறினர். மாணவியின் கோரிக்கையை ஏற்று அமைச்சர் ஆர்.காந்தி மேற்படிப்புக்கு உதவி செய்வதாக தெரிவித்தார். மேலும் சோளிங்கர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், முனிரத்தினம் எம்.எல்.ஏ., ஒன்றிய குழு தலைவர் கலைக்குமார் ஆகியோர் சிகிச்சைக்கு பண உதவி செய்து வந்தனர்.

இந்த நிலையில் பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவி யோகலட்சுமி 600-க்கு 443 மதிப்பெண் பெற்றார். கண்பார்வை இழந்த நிலையிலும் 443 மதிப்பெண் பெற்றதையொட்டி மாணவி யோகலட்சுமியை பல்வேறு தரப்பினர் பாராட்டினர்.

இந்த நிலையில் மாணவி யோகலட்சுமியை சோளிங்கர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து, இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது மாணவிக்கு பொன்னாடை அணிவிக்கப்பட்டதோடு கேக்வெட்டி அனைவருக்கும் வழங்கப்பட்டது. இதில் சப்-இன்ஸ்பெக்டர்கள் மோகன், ரவி மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்