அரசு பள்ளிக்கு தனது சேமிப்பு பணத்தில் வாங்கிய அப்துல் கலாம் படத்தை வழங்கிய மாணவர்
தனது சேமிப்பு பணத்தில் வாங்கிய அப்துல் கலாம் படத்தை அரசு பள்ளிக்கு மாணவர் வழங்கினார்.
அரவக்குறிச்சி
அரவக்குறிச்சியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர் ச.லிங்கேஷ். இந்த மாணவர் தான் சேமித்து வைத்திருந்த பணத்தில் இருந்து முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல் கலாம் உருவ படத்தை வாங்கி தனது பெற்றோருடன் பள்ளிக்கு வந்து வழங்கினார். அதை பள்ளித் தலைமை ஆசிரியர் சாகுல்அமீது பெற்றுக்கொண்டார். இதையடுத்து மாணவர் லிங்கேஷை ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினார்கள்.