அடுத்த மாதம் 3-ந் தேதி வேலை நிறுத்த போராட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த மாதம் 3-ந் தேதி வேலை நிறுத்த போராட்டம் நடக்கிறது

Update: 2022-08-21 18:30 GMT

மன்னார்குடி‌ அரசு ஆஸ்பத்திரி ஒப்பந்த தொழிலாளர்கள் சங்க கூட்டம் சங்கத்தின் தலைவர் பாப்பையன் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் சுரேஷ், பொருளாளர் விக்னேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் செல்வராஜ், ஒன்றிய செயலாளர் வீரமணி, சங்கத்தின் மாவட்ட செயலாளர் காந்தி உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.கூட்டத்தில், மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 20 ஆண்டுகளாக குறைந்த சம்பளத்தில் பலர் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் ஆஸ்பத்திரி கழிவுகளை அகற்றுதல், நோயாளிகளின் படுக்கை விரிப்புகளை துவைப்பது, கொரோனா வார்டில் கருணை உள்ளத்தோடு பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கு 2021-22-ம் ஆண்டிற்க்கான மாவட்ட கலெக்டரின் பரிந்துரைப்படி ஊதியம் வழங்க வேண்டும். 8 மணி நேர வேலையை வரைமுறை செய்திட வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு உடை மாற்று அறை ஒதுக்க வேண்டும். கொரோனா காலகட்டத்தில் தமிழக அரசு அறிவித்த ஊக்க தொகையை ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் வழங்கிட வேண்டும். அவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த மாதம் (செப்டம்பர்) 3-ந் தேதி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.





Tags:    

மேலும் செய்திகள்