சென்னையில் மெட்ரோ குடிநீர் லாரிகள் அறிவித்திருந்த வேலை நிறுத்தம் வாபஸ்
மெட்ரோ குடிநீர் லாரிகள் நாளை வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது .
சென்னை,
.
சென்னையில் மெட்ரோ குடிநீர் விநியோகம் செய்யும் லாரிகள் திடீர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கோடம்பாக்கம், தி.நகர், ஆர்.ஏ.புரம், மந்தைவெளி, கிரீன்வேஸ் சாலை, திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளுக்கு லாரிகள் மூலம் செல்லும் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது.
தண்ணீர் விநியோகம் செய்யும் லாரிகளுக்கு போதிய அளவில் தண்ணீர் வழங்கவில்லையென எனக் கூறி வேலை நிறுத்தம் செய்தனர்.
இந்த நிலையில் சென்னையில் மெட்ரோ குடிநீர் லாரிகள் அறிவித்திருந்த வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது .
மெட்ரோ குடிநீர் லாரிகள் நாளை வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்கப்ட்டுள்ளது