பி.ஏ.பி.கால்வாய் கரையில் சாய்ந்து கிடக்கும் கல்தூண்கள்

பி.ஏ.பி.கால்வாய் கரையில் சாய்ந்து கிடக்கும் கல்தூண்கள்

Update: 2022-09-10 12:15 GMT

உடுமலை

உடுமலை அருகே பி.ஏ.பி. உடுமலை கால்வாய் கரைப் பகுதியில் ஒளிரும் வில்லையுடன் ஒட்டப்பட்டுள்ள கல் தூண்கள் கீழே சாய்ந்து கிடக்கிறது.

பி.ஏ.பி.கால்வாய் கரை

பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தில் உடுமலையை அடுத்துள்ள திருமூர்த்தி அணையில் இருந்து 2-ம் மண்டல பாசனத்திற்கு கடந்த மாதம் (ஆகஸ்டு) 26-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் பி.ஏ.பி. உடுமலை கால்வாயிலும் சென்று கொண்டுள்ளது. பி.ஏ.பி. உடுமலை கால்வாய் கரைப்பகுதியில் பெரும்பாலான பகுதி மண்பாதையாகும். ஆங்காங்கு தோட்டத்து சாலையில் உள்ளவர்கள் மற்றும்

பணி நிமித்தமாக செல்லும் பி.ஏ.பி. பொதுப்பணித்துறையினர் ஆகியோர்தான் இந்த பாதையை அதிகம் பயன்படுத்துவார்கள்.

இதில் குடியிருப்புகள் அதிகம் உள்ள பகுதியான பழனி சாலையை அடுத்துள்ள வெஞ்சமடை பகுதிக்கு அருகில் இருந்து அரசு கலைக்கல்லூரிக்கு அருகில் உள்ள எலையமுத்தூர்சாலை சந்திப்பு வரை கால்வாய் கரைப்பகுதி தார்சாலையாக உள்ளது. இந்த தார்சாலையை அந்த பகுதியில் உள்ள குடியிருப்புகளை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது மற்றவர்களும் போக்குவரத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர். பழனி சாலை மற்றும் கொழுமம் சாலைகளில் வாகனங்களில் வருகிறவர்கள் எலையமுத்தூர் சாலைக்கு வந்துசேர்வதற்கு உடுமலை நகர் பகுதிக்குள் வந்து வருவதென்றால் சுற்றி வரவேண்டும் என்பதால் தார் சாலையாக அமைந்துள்ளது. இந்த கால்வாய் கரையின் வழியாக வந்து செல்கின்றனர். அதேபோன்று எதிர் திசையிலும் வாகனங்கள் ஆகியவையும் வந்து செல்கின்றன. இரவு நேரங்களிலும் வாகன போக்குவரத்து இருக்கும்.

சாய்ந்து கிடக்கும் கல் தூண்கள்

அதனால் விபத்துகளை தவிர்க்கும் வகையிலும், தடுக்கும் வகையிலும் இந்த தார்சாலை அமைந்துள்ள கால்வாய் கரைப்பகுதியில் சில அடிகளுக்கு ஒரு கல்தூண் வீதம் பதிக்கப்பட்டுள்ளது.அதில், இரவு நேரத்தில் தெரியும் வகையில் சிகப்பு கலரில் ஒளி பிரதிபலிப்பானும் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த கல் தூண்களில் ராயல்லட்சுமி நகர், உள்ளிட்ட சில இடங்களில் சில தூண்கள் ஆங்காங்கு சாய்ந்து கீழே கிடக்கிறது. சில கல்தூண்கள் செடிமறைவில் கிடக்கிறது.அவற்றை மீண்டும் அதே இடத்தில் நடவேண்டும் என்பது வாகன ஓட்டுனர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்