ராணுவ வீரரின் உடல் இன்றுசொந்த ஊருக்கு கொண்டு வரப்படுகிறது
மராட்டிய மாநிலத்தில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் இன்று சொந்த ஊருக்கு கொண்டு வரப்படுகிறது.
குலசேகரம்:
மராட்டிய மாநிலத்தில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் இன்று சொந்த ஊருக்கு கொண்டு வரப்படுகிறது.
குலசேகரம் அருகே உள்ள திருநந்திக்கரை வியாலிவிளையை சேர்ந்தவர் முருகன், தொழிலாளி. இவருடைய மகன் விஜய் (வயது 24). இவர் கடந்த 2020-ம் ஆண்டு ராணுவத்தில் பணியில் சேர்ந்தார். தற்போது பஞ்சாப் மாநிலத்தில் பணியாற்றினார்.
கடந்த 4-ந் தேதி விஜய் சொந்த ஊருக்கு வருவதற்காக ரெயிலில் புறப்பட்டார். நேற்று முன்தினம் மராட்டிய மாநிலம் சந்திராப்பூர் மாவட்டம் பத்ராவதி என்ற இடத்தில் வந்து கொண்டிருந்த போது விஜய் ரெயிலில் இருந்து கீழே தவறி விழுந்து இறந்ததாகவும், அவரது உடல் பத்ராவதி அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளதாகவும் குடும்பத்தினருக்கு தகவல் ெதரிவிக்கப்பட்டது. இந்தநிலையில், பத்ராவதி அரசு ஆஸ்பத்திரியில் விஜய்யின் உடல் பிேரத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் இன்று காலை 9.30 மணிக்கு சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்படுகிறது.