முட்டைகளை விழுங்கிய பாம்பு பிடிபட்டது

முட்டைகளை விழுங்கிய பாம்பு பிடிபட்டது

Update: 2022-12-16 18:45 GMT

ஆரல்வாய்மொழி:

தோவாளையில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு தொடக்கப்பள்ளியும் அதே இடத்தில் தான் செயல்படுகிறது. இங்குள்ள சத்துணவு கூடத்தில் உணவுக்கான அரிசி, முட்டை மற்றும் மளிகை பொருட்கள் வைக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் நேற்று காலையில் சத்துணவு ஊழியர் சத்துணவு கூடத்தை திறந்து உள்ளே சென்ற போது முட்டை பெட்டியின் அருகே நல்ல பாம்பு ஒன்று நகர முடியாமல் கிடந்தது. இதனை பார்த்ததும் அவர் அதிர்ச்சி அடைந்தார்.

சில முட்டைகளை விழுங்கியதால் அந்த பாம்பின் வயிறு வீங்கிய நிலையில் இருந்தது. உடனே இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வன ஊழியர் துரை ராஜ், வேட்டை தடுப்பு காவலர் சிவா ஆகியோர் விரைந்து வந்து 4½ அடி நீளமுள்ள நல்ல பாம்பை பிடித்தனர். பின்னர் அதனை அடர்ந்த காட்டில் கொண்டு விட்டனர். பள்ளி சத்துணவு கூடத்தில் புகுந்த பாம்பால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்