வீட்டிற்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது
ஆம்பூர் அருகே வீட்டிற்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த பெரிய மலையாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் மணிமாறன். இவரது வீட்டுக்குள் 5 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பு புகுந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆம்பூர் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று நல்ல பாம்பை பிடித்து அருகே உள்ள வனப்பகுதியில் விட்டனர்.