புதர்மண்டி கிடக்கும் பள்ளிக்குள் புகுந்த பாம்பு
புதர்மண்டி கிடக்கும் பள்ளிக்குள் புகுந்த பாம்பு
திருப்பூர்
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் காங்கயம் அகஸ்திலிங்கம்பாளையம் பகுதியை சேர்ந்த சேனாபதி மற்றும் மக்கள் அளித்த மனுவில், 'எங்கள் பகுதியில் உள்ள சிறுவர்கள் படிக்கும் அங்கன்வாடி மற்றும் தொடக்கப்பள்ளிக்கு அருகே கழிவுநீர் கால்வாயில் சாக்கடை தேங்கி கொசு உற்பத்தி அதிகரித்து துர்நாற்றம் வீசுகிறது. புதர்கள் மண்டி கிடப்பதால் அங்கிருந்து பாம்புகள் பள்ளிக்குள் புகுந்து விடுகிறது. கடந்த 1-ந் தேதி பள்ளிக்குள் 4 பாம்புகள் புகுந்துவிட்டன.
தீயணைப்புத்துறையினர் வந்து பார்த்துவிட்டு புதர்கள் மண்டியிருப்பதால் பாம்புகளை பிடிக்க முடியாமல் சென்று விட்டனர். எனவே கழிவுநீர் கால்வாயை சீரமைத்து புதர்களை அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியுள்ளனர்.