வலையில் சிக்கிய பாம்பு பிடிபட்டது
வெள்ளிச்சந்தை அருகே வலையில் சிக்கிய பாம்பு பிடிபட்டது;
ராஜாக்கமங்கலம்,
வெள்ளிச்சந்தை அருகே உள்ள சடையால்புதூரில் ஒரு வீட்டின் காம்பவுண்டு சுவர் ஓரமாக தடுப்பு வலை கட்டி வைத்து கோழிகளை வளர்த்து வந்தனர். நேற்று காலையில் ஒரு நல்லபாம்பு வலையில் சிக்கியிருந்தது. இது சம்பந்தமாக நாகர்கோவில் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தீயணைப்புதுறை சிறப்பு உதவி அலுவலர் சுயம்பு சுப்பாராமன் தலைமையில் அலுவலர்கள் ஹரிகரன், சண்முகசுந்தர், மகாதேவன், மகேந்திரன் மற்றும் சிவசரவணன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பாம்பை லாவகமாக பிடித்தனர். பின்னர் அதை அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் விட்டனர்.