புதிய பஸ் நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரூராட்சி அலுவலகம் முற்றுகை

இளையான்குடியில் புதிய பஸ் நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டம் நடத்திய 128 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2022-05-31 19:37 GMT

இளையான்குடி

இளையான்குடியில் புதிய பஸ் நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டம் நடத்திய 128 பேர் கைது செய்யப்பட்டனர்.

போராட்டம்

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது.

இந்தநிலையில் பழைய பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க கோரியும், புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் நல கூட்டமைப்பு மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் இளையான்குடி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது.

கைது

போராட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட பெண்களும் 400-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர். போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டதால் அரசின் தடையை மீறி போராட்டம் நடத்தியதாக 128 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் தனியார் திருமண மகாலில் தங்க வைக்கப்பட்டனர்.

போராட்டம் காரணமாக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அன்பு, துணை போலீஸ் சூப்பிரண்டு பால்பாண்டி, இளையான்குடி இன்ஸ்பெக்டர் அழகர் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்