அரசுப் பள்ளிகளில் இன்று திரையிடப்படும்'தி ரெட் பலூன்' குறும்படம்...!

ஆஸ்காா் விருது பெற்ற ‘தி ரெட் பலூன்’ குறும்படம் அரசுப் பள்ளிகளில் இன்று திரையிடப்படவுள்ளது.;

Update: 2022-10-13 03:35 GMT

சென்னை,

ஆஸ்காா் விருது பெற்ற 'தி ரெட் பலூன்' குறும்படம் அரசுப் பள்ளிகளில் இன்று திரையிடப்படவுள்ளது.

மாதத்தின் ஒவ்வொரு இரண்டாவது வாரமும் அனைத்து அரசு நடுநிலை, உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு, அவற்றுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பாடவேளைகளில் சிறாா் திரைப்படங்கள் திரையிட ஏற்கெனவே உத்தரவிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் இன்று 'தி ரெட் பலூன்' திரைப்படம் திரையிடப்படுகிறது. இந்தப் படம் பிரெஞ்சு மொழியில் ஆஸ்காா் விருது பெற்ற குறும்படமாகும்.

Tags:    

மேலும் செய்திகள்